சிம்மம் மார்ச் 2025 மாத ராசி பலன்
AstroVed’s Astrology Podcast - Un pódcast de AstroVed - Viernes

Categorías:
கணவன் மனைவி உறவு சுமுகமாக இருக்கும். மாத பிற்பகுதியில் உங்கள் திருமண வாழ்வில் சில சவால்களை சந்திக்க நேரும். இந்த சூழலை அமைதியாக எதிர்கொள்ளுங்கள். பரஸ்பரம் வெளிப்படையாக இருங்கள். உங்கள் துணையுடன் நீங்கள் செலவிடும் ஒவ்வொரு தருணத்தையும் அனுபவித்து மகிழ முயற்சி மேற்கொள்ளுங்கள். பரஸ்பரம் அன்பையும் அக்கறையையும் பகிர்ந்து கொள்ளுங்கள். காதலர்களுக்கு இது ஒரு மகிழ்ச்சியான காலக்கட்டமாக இருக்கும், மேலும் வீட்டில் இருக்கும் வயது மூத்த உறுப்பினர்களுடனான உங்கள் உறவு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும். நிதிநிலை சராசரியாக இருக்கும். வரவை விட செலவு அதிகமாக இருக்கலாம்.பட்ஜெட் அமைத்து செயல்படுவது சிறப்பு இதன் மூலம் பணம் அதிகம் வெளியேறாமல் பாதுகாக்க இயலும். உங்கள் நிதிப் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளுங்கள். நீங்கள் ஆர்வமுடனும் ஈடுபாட்டுடனும் வேலை செய்வீர்கள் பணியிடச் சூழல் உங்களுக்கு சாதகமாக இருக்கும். தகவல் தொழில்நுட்பத் துறையில் பணி புரிபவர்கள் மிகவும் கடினமான காலகட்டத்தை சந்திக்க நேரலாம். சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவளிக்க மாட்டார்கள். உற்பத்தித் துறையில் பணிபுரிபவர்களுக்கு இது அனுகூலமான நேரம். ஆசிரியராகப் பணிபுரியும் அன்பர்களுக்கு அற்புதமான காலம். மருத்துவத் துறையில் இருப்பவர்கள் மிகவும் பரபரப்பான நேரத்தைக் காணலாம். சினிமா மற்றும் மீடியா துறையைச் சேர்ந்தவர்களும் தங்கள் துறைகளில் சிறப்பாகப் பணி புரிவார்கள். இந்தக் காலகட்டம் புதிய தொழில் தொடங்க ஏதுவாக உள்ளது.நீங்கள் தொழிலில் வெற்றி பெறுவீர்கள். ஏற்கனவே சொந்த வியாபாரத்தை நடத்துபவர்களுக்கு இது நல்ல நேரமாக இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் அதிகரித்த லாபம் காண்பீர்கள். இந்த கட்டத்தில், சிறிய உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படலாம். அது உங்கள் அன்றாட செயல்பாட்டை ஓரளவு பாதிக்கும் சிறிய அசௌகரியங்களை நீங்கள் உணரலாம். முழங்கால் மூட்டு வலி போன்ற உபாதைகள் வரலாம். உடனடி மருத்துவ சிகிச்சை சிறந்த ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும்.பள்ளி மாணவர்களுக்கு இந்த மாதம் சற்று கடினமான நேரமாக இருக்கலாம். அதேசமயம் பட்டதாரி மாணவர்கள் சிறந்த முறையில் கல்வி பயில்வார்கள். இந்த நேரத்தில், முதுகலை மாணவர்கள் வருங்கால கல்வியில் திடீர் உயர்வைக் காண்பார்கள். ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மாணவர்கள், நம்பிக்கையுடன் செயல்பட்டு தங்கள் ஆய்வறிக்கைப் பணிகளை முடிப்பார்கள்.