தனுசு மார்ச் 2025 மாத ராசி பலன்
AstroVed’s Astrology Podcast - Un pódcast de AstroVed - Viernes

Categorías:
இந்த மாதம் உறவு நிலையைப் பொறுத்தவரை சிலிர்ப்பூட்டும் அனுபவங்களைப் பெறுவீர்கள். காதலர்களுக்கு இது மகிழ்ச்சிகரமான மாதமாக இருக்கும். காதலர்கள் தங்கள் துணையுடன் வெளியிடங்களுக்கு சென்று வரலாம். உற்சாகமூட்டும் இடங்கள், இயற்கை காட்சிகள் நிறைந்த இடங்கள் மற்றும் உணவகங்கள் என வெளியிடங்களுக்கு சென்று வரலாம். இந்த அனுபவங்கள் மகிழ்ச்சியை அளிக்கக் கூடியதாக இருக்கும். திருமணமான தம்பதிகளுக்குள் அன்னியோன்யம் மற்றும் பிணைப்பு நெருக்கமாக இருக்கும். என்றாலும் குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்கள் மூலம் சில பதட்டமான சூழலை சந்திக்கலாம். இந்த மாதம் உங்கள் நிதிநிலை சீராக இருக்கும். நீங்கள் பொருளாதார முன்னேற்றம் காண்பீர்கள். உங்கள் நிதிநிலை மேம்பட, உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் உதவி புரிவார்கள். அவர்களின் ஊக்குவிப்பு மற்றும் வழிகாட்டுதல் உங்களின் பொருளாதார இலக்குகளை நீங்கள் அடைய உறுதுணையாக இருக்கும். பணம் சார்ந்த விஷயங்களில் கவனமாக செயல்படுங்கள். வெளி நபர்களின் ஆலோசனை மற்றும் கருத்துகள், உங்கள் நிதிநிலையை மோசமாக்கலாம். கவனம் தேவை. தொழிலில் இந்த மாதம் முதலீடு செய்யாதீர்கள். குறுகிய கால முதலீடு எதிர்காலத்திற்கு நன்மை அளிக்கும். இந்த மாதம் நீங்கள் உங்கள் உத்தியோகத்தில் மிகப் பெரிய வெற்றியைக் காண்பீர்கள். மேலதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். மேலும் அலுவலக மேம்பாட்டிற்கான உங்கள் முயற்சிகளுக்கு சக பணியாளர்கள் நல்ல ஒத்துழைப்பை அளிப்பார்கள். உங்களின் சிறந்த செயல்பாட்டிற்கு, நீங்கள் அலுவலகத்தில் இருந்து பல வெகுமதிகளைப் பெறலாம். புதிய தொழில் தொடங்குபவர்கள் கவனமாக செயல்பட வேண்டும். தொழில் சார்ந்த மூலதனங்களில் கவனமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும். குறைந்த மூலதனத்தில் தொழில் தொடங்குவது நல்லது. ஏற்கனவே தொழில் செய்பவர்கள், தங்கள் தொழில் விரிவாக்கத்திற்கு பொறுமை காக்க வேண்டும். உங்கள் உடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் இந்த மாதம் சிறப்பாக கல்வி பயில்வார்கள். அவர்களுக்கு ஆசிரியர்களின் வழிகாட்டுதல்கள் இருக்கும். கல்லூரியில் பயிலும் மாணவர்கள் தங்கள் திறமைகளை நிரூபிப்பார்கள். வெளிநாடு சென்று உயர்கல்வி பயில எண்ணும மாணவர்கள் தங்கள் எண்ணம் நிறைவேறக் காணலாம்.