மேஷம் மார்ச் 2025 மாத ராசி பலன்
AstroVed’s Astrology Podcast - Un pódcast de AstroVed - Viernes

Categorías:
இந்த மாதம் நீங்கள் உங்கள் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வீர்கள். நீங்கள் கடினமாக உழைப்பீர்கள். அதற்கேற்ற பலனையும் பெறுவீர்கள். காதலர்களுக்கு இந்த மாதம் மகிழ்சிகரமான காலக்கட்டமாக இருக்கும். நீங்கள் இருவரும் ஒன்றாக வெளியிடங்களுக்கு சென்று மகிழ்வீர்கள். குடும்பத்தில் சில கருத்து வேறுபாடுகள் எழலாம். தம்பதிகளுக்குள் சில கருத்து வேறுபாடுகள் வரலாம். உங்கள் பெற்றோருடனான உறவு இணக்கமாக இருக்கும். குழந்தைகளுடன் நல்லுறவை பராமரிக்க முயற்சி செய்யுங்கள். அவர்களை பொறுமையாகக் கையாளுங்கள். நண்பர்கள் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களுடன் நல்லுறவை பராமரிப்பீர்கள். உங்கள் வருமானம் அதிகரிக்கும். நீங்கள் அனாவசிய செலவுகளைச் செய்யலாம். அதனை தவிர்ப்பது நல்லது. யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள்.எந்த முதலீடுகளையும் மேற்கொள்ளாதீர்கள். பணியிடச் சூழல் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நீங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த ஊதிய உயர்வு இந்த மாதம் உங்களுக்கு கிடைக்கலாம். நீங்கள் சக பணியாளர்களுக்கு வழிகாட்டியாக இருப்பீர்கள். ஐடி துறையினர் கவனமாக இருக்க வேண்டும். உங்களில் ஒரு சிலருக்கு பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்கலாம். சினிமா மற்றும் ஊடகத் துறையில் பணி புரிபவர்கள் இந்த மாதம் பிரகாசிக்கலாம். வக்கீல் தொழில் புரிபவர்கள் சற்று பின்னடைவைக் கண்டாலும் வெற்றி காணலாம். மருத்துவத் துறையில் இருப்பவர்கள் சில சிரமங்களைத் தாண்டி வெற்றி காணலாம். உற்பத்தி சார்ந்த துறையில் இருப்பவர்கள் இந்த மாதம் கடினமான காலத்தை சந்திக்க நேரும். என்றாலும் இறுதியில் வெற்றி காண இயலும். ஆராய்ச்சித் துறையில் இருப்பவர்கள் தங்கள் பணிக்கான பாராட்டைப் பெறலாம். நீங்கள் குறைந்த மூலதனத்தில் அதிக லாபம் எடுக்கும் முயற்சிகளை மேற்கொள்ளலாம். இந்த மாதம் கூட்டுத்தொழிலை தவிர்த்து விடுங்கள். உங்கள் தொழில் சார்ந்த விஷயங்கள், நடவடிக்கைகள் மற்றும் முடிவுகளில் மூன்றாம் நபரின் தலையீட்டை அனுமதிக்காதீர்கள். வெளிநாட்டில் தொழில் தொடங்கும் எண்ணம் இருந்தால் அதனை சிறிது காலத்திற்குத் தள்ளிப் போடவும்.உங்கள் உடல்மற்றும் மன ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சிறந்த ஆரோக்கியத்தை தக்க வைத்துக் கொள்ள தியானம் மற்றும் யோகா மேற்கொள்வது நல்லது. வயிறு சம்பந்தமான பிரச்சினை ஏற்படாமல் இருக்க வெளி உணவுகளைத் தவிர்க்கவும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் சிறப்பாகக் கல்வி பயின்று வெற்றி காணலாம்.