ரிஷபம் மார்ச் 2025 மாத ராசி பலன்

AstroVed’s Astrology Podcast - Un pódcast de AstroVed - Viernes

திருமணமான தம்பதிகளுக்கு இடையே புரிந்துணர்வின்மை காரணமாக கருத்து வேறுபாடுகள் எழ வாய்ப்புள்ளது. குடும்பத்தில் உங்கள் பொறுப்புகளை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். நீங்கள் எதிர்பார்த்த அளவிற்கு நண்பர்கள் உங்களுக்கு ஆதரவு அளிக்க மாட்டார்கள். காதலர்கள் தங்கள் உறவை வெளியிடங்களுக்குச் செல்வதன் மூலம்  வலுப்படுத்திக் கொள்ளலாம். உங்கள் உறவு குறித்த விஷயங்களை இந்த மாதம் யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். இந்த மாதம் நீங்கள் உங்கள் நிதிநிலையில் ஏற்றம் காண்பதற்கான வாய்ப்பு உள்ளது. உங்கள் நிதிநிலை மேம்பட நண்பர்கள்  மற்றும் உறவினர்கள் உதவுவார்கள். அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். என்றாலும் சில சமயங்களில் உங்களைச் சுற்றி இருப்பவர்களின் ஆலோசனை உங்களை சில சிக்கலான சூழ்நிலைக்கு ஆட்படுத்தலாம். எனவே பண விஷயத்தில் கவனமாக செயல்படுங்கள். புதிய முதலீடுகளை இந்த மாதம் மேற்கொள்வது ஏற்றமானதாக இல்லை. அதனை தள்ளிப் போடுவது நல்லது. உங்கள் உத்தியோக நிலையில் நீங்கள் முன்னேற்றம் காண வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் உங்களுக்கு செல்வாக்கு கூடும். மேலதிகாரிகள் உங்கள் செயல் திறனை பாராட்டி வெகுமதிகள் அளிக்கலாம். தகவல் தொழில் நுட்பத் துறையில் இருப்பவர்கள் பதவி உயர்வு மற்றும் பிற சலுகைகள் காண பொறுமை காக்க வேண்டும். ஊடகம் மற்றும் சினிமா துறையில் இருப்பவர்கள் அஜாக்கிரதையாக செயல்படுவதை தவிர்க்க வேண்டும். மருத்துவத் துறையில் இருப்பவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். சட்டத் துறையில்  இருப்பவர்கள் இந்த மாதம் சற்று சிறிய பின்னடவை சந்திக்க  நேரலாம். உற்பத்தித் துறையில் இருப்பவர்களுக்கு இந்த மாதம் மகத்தான  நேரமாக  இருக்கும். இந்த மாதம் புதிய தொழில் தொடங்க மிக்க அனுகூலம் இல்லை என்றாலும். குறைந்த முதலீட்டில் தொடங்கலாம்.  ஏற்கனவே தொழில் தொடங்கி நடத்துபவர்கள் பொறுமையுடன் செயல்பட வேண்டும். இந்த மாதம் நீங்கள் கூட்டுத் தொழில் மேற்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.  இந்த மாதம் நீங்கள் சிறு ஆரோக்கியப் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். சளி, லேசான காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு இருக்கலாம். நீங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.  பள்ளிக் கல்வி மற்றும் கல்லூரி மாணவர்கள் இந்த மாதம் கல்வியில் சிறந்து விளங்க கூடுதல் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். கூடுதல் நேரம்  எடுத்துப் படிக்க வேண்டும்.

Visit the podcast's native language site